Monday, February 28, 2011

தாலி இல்லாமல் கொளுத்த ராகுகாலத்தில்

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் - பேராசிரியர் சி.பூரணம் இணையரின் மகன் பாலு, இ.தாமோதரன் - த.தனலட்சுமி இணையரின் மகள் ரம்யா ஆகியோரின் திருமணம், சென்னை பெரியார் திடலில், 06.02.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அ.சவுந்தரராசன், கவிஞர் இளவேனில், தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா, பேரா.சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் காமராஜ், ரா.கண்ணன், வழக்.பொற்கொடி உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்திப் பேசினர். எந்தவித சடங்குகளும் இன்றி, தாலி இல்லாமல் கொளுத்த ராகுகாலத்தில் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு, உறுதி ஏற்று, கையொப்பம் இட்டதுடன் திருமண நிகழ்வுகள் முடிந்தன. நூற்றுக்கு நூறு முழுமையான, சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்ற இந்த மணவிழா, பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது மிகவும் பொருத்தமானது என்று வாழ்த்திப் பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். அனைவரையும் தோழமைக் குடும்பத்தினரும், மதுரை எஸ்.கண்ணனும் வரவேற்றனர். இறுதியாக மணமக்கள் ஏற்புரை ஆற்றினர்.

சாதிமறுப்பு பார்ப்பனப் புரோகிதமறுப்புத் திருமணம்

பெரியாரியலாளரும், வனத்துறையில் பணியாற்றுபவருமான தோழர் இல. கோவிந்தசாமி - செயசிறீ இணையரின் மகள் செ.கோ. விடுதலைச்செல்விக்கும்,

திருச்சிராப்பள்ளி, எம்..எம். பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருமிகு முனைவர் கி.குமார் - .விசயலெட்சுமி இணையரின் மகன் வி.கு.விமல்குமாருக்கும்

சாதிமறுப்பு, புரோகிதமறுப்புத் திருமணம் 16.02.2011 அன்று திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான்திருமலை, யோகலெட்சுமி திருமணமணடபத்தில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர்

இரா. இளங்குமரனார் தலைமையில் நடைபெற்றது.

 

பார்ப்பனப் புரோகிதர்களை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் தோழர்கள் மஞ்சை வசந்தன், தா.பெ.. தேன்மொழி, வி.சி.வில்வம் ஆகியோர் எழுதிய

கட்டுரைகள் அடங்கிய நூல் (தன்மதிப்புத் திருமணம் ஏன்?) விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 

இந்தத் திருமணவிழாவின் சிறப்பு என்பது, சாதிமறுப்புத் திருமணம் என்பதும், கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பதும்தான்.

பெரியாரியலாளர்களும், முற்போக்காளர்களும் பெயரளவுக்கு மட்டுமே கொள்கைபேசிவிட்டு, மேடையில் மட்டுமே முழங்கிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற முன்மாதிரிச்செயல்களைச்

செய்ய முன்வருவது நல்லது!

இந்தசெய்தியினை இந்த வலைப்பதிவிலும் காணலாம்